கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் -பிரதமர் மோடி!
கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அப்போது சுரங்கம், ரயில்வே மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் பொது மக்கள் நலனுக்கும் இந்த திட்டம் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் […]
இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றம் -பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் […]
ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி !
ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த […]
பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் விருது வழங்கி கவுரவிப்பு !
பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற அவர், தலைநகர் நிகோசியாவ்வுக்குச் சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் பிரதமர் மோடியை வரவேற்றார். அதைத் தொடர்ந்து லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சைப்ரஸ் […]
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் !
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்தவிபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,இத்துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் “அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, […]
அகமதாபாத் விமான விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி!
அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைவதுதான் விமானத்தின் பயணத்திட்டம். மேலும், இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர், பணியாளர்கள் 10 பேர்,பயணிகளில் […]
பிரதமர் மோடியை சந்தித்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு !
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பிய அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்தனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதைத் தடுத்திட, ஒன்றிய அரசு, தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது. […]
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கனடா அரசு!
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது, மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள […]
உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை இன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி !
காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து திறந்துவைத்துள்ளார். காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார். அதோடு, உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்துள்ளார். சுமார் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ள பிரதமா் மோடி, பாகிஸ்தானுக்கு […]
நாளை கூடுகிறது ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் !
சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாளை, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே, ஆபரேஷன் […]