நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 21- ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் […]

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் – டொனால்ட் டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அணு ஆயுதப் போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 18வது முறையாகப் பேசியுள்ளார். கடந்த மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார். நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்றும் இரு […]

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்த ஆசிய வளர்ச்சி வங்கி -கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !

பாகிஸ்தானுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதியுதவி அளிப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும். இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி […]

மீண்டும் தொடங்கியது அட்டாரி – வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு !

போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி – வாகா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று துவங்கியது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் புகுந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி – […]

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது என்றும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இருக்கும் என பிரதமர் மோடி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை மூட […]

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் …புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குசந்தை !

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்பட்டு வந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்றனர். இதனால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குகள் புதிய […]