தூத்துக்குடி|சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு !

தூத்துக்குடி, அருகே, சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர், மூச்சுத் திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சார்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி, சங்கு குளிக்கும் மீனவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல், கனி என்பவரது படகில் ஆறு பேருடன் சென்ற மாயாண்டி, நடுக்கடலில் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாயாண்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து […]

தூத்துக்குடியில் ஆம்னி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் -பிரேமலதா விஜயகாந்த் !

கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ”தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளாளன்விளை ஆலய திருவிழாவிற்கு கோவையில் இருந்து சென்றபோது விபத்துக்கு உள்ளாகி திரு.கெர்சோம், மோசஸ், ரவி கோயில் பிச்சை, ஸ்டாலின் (குழந்தை), வசந்தா திருமதி.ஜெனிபர் எஸ்தர், சைனி கிருபாகரன், ஆகியோர் வரும் வழியில் பாபநாசம் அணையில் குளித்துவிட்டு கருங்குளம் வழி வரும் பொழுது பேய்குளம் அருகில் உள்ள […]

சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய வேண்டும் – தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்து 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் உயிரிழந்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]