திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு !

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மா்மநபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், குற்றவாளியைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, குற்றவாளி […]

திருவள்ளூர் | திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை !

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் […]

முறையாக செயல்படாத நெல் கொள்முதல் நிலையம் -விவசாயிகள் வேதனை!

பெரியபாளையம் அருகே, நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, ஆவாஜிப்பேட்டையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர். போதிய இடவசதி, […]

சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறை நண்பர்களுக்கு பாராட்டு !

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டி தற்போது,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை,கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில்,தற்போது காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.குற்ற செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்துவருகின்றனர். இந்தநிலையில்,இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரா.சீனிவாச பெருமாள்( SP ) அவர்களால் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் […]