ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி- திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு !

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய வழக்கில் கைதான ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண், திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் பிப்ரவரி 7ஆம் தேதி வழக்கம் போல தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் […]

திருப்பத்தூர் | தனியார் கல்குவாரிக்கு அபராதம் விதித்த தேவகோட்டை சார் ஆட்சியர்!

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரியில் கடந்த மாதம் 20 ம் தேதி, 400 அடி ஆழப் பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக துளையிடும் பணி நடைபெற்றது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்க அரசாணை பிறப்பிக்கவேண்டும் -உயர் நீதிமன்றம் உத்தரவு !

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளையும் கேட்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். சாதி, […]

திருப்பத்தூர் | பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற மாணவன் உயிரிழப்பு !

பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தபேதர் முத்துசாமி தெருவைச் சேர்ந்த பாபு . இவரது மகன் ஆர்யா இவருக்கு வயது பன்னிரெண்டுஆர்யா, பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் ஆர்யா தனது சொந்த ஊரில் உள்ள தனது நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள செல்லா குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த […]