தமிழ்நாடு | நேற்று நள்ளிரவில் இருந்து மீன் பிடி தடைக்கலாம் அமல் !

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் […]

‘ஜிப்லி புகைப்படத்தால் தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம்’-சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை !

ஜிப்லி புகைப்படங்களை பயண்படுத்தி தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது. இது குறித்து சைபர் குற்றப் பிரிவு வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கையில், ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள் எனவும், ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது […]

தமிழகம் முழுவதும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !

தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள் யாவரும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் இணையும் வசதி உண்டு. 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து, பல்வேறு கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருகின்றது.மேலும், தற்போது இந்த உறுப்பினர் சேர்க்கையும் மக்கள் மத்தியில் நல்ல […]

தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு…இன்று முதல் அமல்!

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கaச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு முதல் […]