தமிழ்நாடு பள்ளிகளில் வகுப்பறைகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை அமல்படுத்த வேண்டும் -பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் தொடர்பை ஊக்குவிக்கவும், வகுப்பறைகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக பள்ளி வகுப்பறை வடிவமைப்பானது ஆசிரியர்களுக்கு நேராக வரிசையாக பெஞ்ச்கள் போடப்பட்டு இருக்கும். அதில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை கவனிப்பார்கள். இதில், உயரமான மாணவர்கள் கடைசி பெஞ்சிலும், உயரம் குறைந்த மாணவர்கள் முதல் பெஞ்சிலும் அமர்வது பொதுவான ஒன்றாகும். இந்நிலையில், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் தொடர்பை […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் […]

தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி !

வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என்றும், நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது என்றும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு […]

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் […]

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி […]

தமிழகத்திற்கு 25% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாரயணன் அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அருகில் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், அதற்கடுத்த 36 மணி […]

சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய வேண்டும் – தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்து 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் உயிரிழந்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை தஞ்சை, திருவாரூர், […]

91ஆயிரத்தை தாண்டிய பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பம் !

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடக்கி தொடங்கப்பட்டது பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் […]