தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் நிதி, மொழி, கல்வி உரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும் என்று, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் எந்தவிதமான விவாதங்களை எழுப்ப […]
மதராசி கேம்ப் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பெரும்பாலான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை முழுமையாகப் […]
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் | சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள பிரேமலதா விஜயகாந்த்!
பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.இந்தநிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் . 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கின்றார்.அது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர்கள் மட்டுமே நிதி […]
டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயலால் மக்கள் அதிர்ச்சி !
டெல்லியில் திடீரென வானிலை மாற்றமாகி புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. புழுதிப்புயலுடன் சேர்த்து லேசான மழையும் பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலத்த காற்றும் வீசியதால் இரவு 9 மணிவரை […]