கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்!
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். […]
பாலியல் வழக்கு |மதபோதகர் ஜான் ஜெபராஜ் நிபந்தனை ஜாமின்வழங்கியது -சென்னை உயர்நீதிமன்றம்!
பாலியல் வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜ் க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்பவர் கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது,நிகழ்ச்சிக்கு வந்த 17 […]
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]