கோவையில் உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது !

கோவையில் தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரித்து வரும் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிரது. இக்கோவிலில் வருவாய்ப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் 15,16ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !

நீலகிரி, கோவை மாவட்டங்களில் 15,16ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 15 மற்றும் 16ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், […]

வால்பாறையில் சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக மீட்பு !

வால்பாறை அருகே சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்முந்தா-மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தூக்கிச் சென்றது. திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு […]

கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து !

கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் என்பவரும் வசித்து வருகிறார். […]

கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை […]

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம் !

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது என்றும், இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் […]

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை !

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது என்றும், இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் […]

கோவையில் சித்திரை திருநாளை முன்னிட்டு ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு !

தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான ஜோதிடரும், வாஸ்து நிபுணருமான ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தின் நிறுவனர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை அமைந்துள்ள, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அருகில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு, தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப்பற்றி தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான […]

பாலியல் விவகாரம் | கோவையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் அதிரடி கைது !

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மத போதகராகவும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 […]