கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்த அவர் 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார். 1938ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அச்சுதானந்தன் கருத்து வேறுபாட்டால் 1940ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் […]