மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு -அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்வு !
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு -கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,452கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில், விரைவில் அணை நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி முதல் […]
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறப்பு !
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளுக்கும் வரும் நீரை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 12 […]
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், […]