மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு | குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை விசாரணை நடத்தியது. இதில் கைது செய்யப்பட்ட 12 பேரும் […]

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நிலயமானம் -திரவுபதி முர்மு உத்தரவு !

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்றத் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு கடந்த 26-ம் தேதி பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு செய்த இந்தப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் […]

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்-உச்சநீதிமன்றம்!

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு கேரளா முன்பு அனுமதி வழங்கியது என்றும், ஆனால் தற்போது, […]

10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

”ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது” என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வாருகின்றார். மேலும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் […]

குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – உச்சநீதிமன்றம் தள்ளுபடி !

13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செப் அறக்கட்டளை சார்பில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது […]