காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி, காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதனை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் […]

ஈரோடு| முதிய தம்பதி கொலை வழக்கு-மேலும் ஒரு நபரை போலீசார் கைது!

ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும், ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி அவரது மனைவி பாக்கியம். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 1ஆம் தேதி இரவு ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் […]

ஈரோட்டில் பாட்டி பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு !

சத்தியமங்கலம் அருகே பாட்டியும், பேரனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டகாஜனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா, அவரது மனைவி தொட்டம்மா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராகவன் சூசையபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ராகவன் தனது வீட்டை ஒட்டியுள்ள பாட்டி சிக்கமா வீட்டில் இரவு நேரத்தில் அவ்வப்போது உறங்கச் செல்வது வழக்கம். […]