நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை !

நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர்-செல்வி தம்பதியினரின் மகன் கவின். இவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த இளைஞர் நெல்லை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளி தோழியுடன் பழகி வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. […]