சாதி அடிப்படையில் கோயிலுக்குள் செல்வதை தடுத்தால் வழக்கு பதிவு செய்யவேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

கோயிலுக்குள் செல்வதை சாதி அடிப்படையில் எவரேனும் தடுத்தால் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் அய்யனார் கோயிலில் பட்டியலினத்தவர் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்; அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டனர் என்றும், கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய […]