நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு !
நியூயார்க் நகரில் கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நெடுஞ்சாலைகள் மற்றும், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் […]
சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்தது டிராகன் விண்கலம் !
சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமிக்கு டிராகன் விண்கலம் இன்று பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் இவர்களுடைய 18 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, சர்வதேச விண்வெளி […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி | போலந்தின் இகா ஸ்வியாடெக் – அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதல் !
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் – அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஒற்றையா் அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 […]
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திரும்பியது கவலையளிக்கிறது – ஐ.நா. கவலை!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ […]
வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை -1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியதால் பரபரப்பு !
கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம். இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் […]