கேரள கடற்கரையில் மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வரும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் !

கேரள கடற்கரையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது.

இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐஎன்எஸ் சூரத் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தது. கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் 4 பேர் கடலில் காணாமல் போன நிலையில், மீதமுள்ள 18 பேரை மீட்டு நேற்று இரவு 10.45 மணிக்கு நியூ மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது.

இதனிடையே, கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாததால் மூன்றாவது நாளாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts