கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு !

கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், முகுல் உர்பெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது