நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம் !

கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ஜூன் 13-ஆம் தேதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. இதையடுத்து, காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை வழக்கம்போல் இயக்கியது. இதைத்தொடா்ந்து, நேற்று காலை சிவகங்கை கப்பல் 95 பயணிகளுடன் புறப்பட்டு காங்கேசன்துறைக்கு சென்றடைந்து.

பின்னா், இலங்கையிலிருந்து 108 பயணிகளுடன் பிற்பகல் புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகத்துக்கு திரும்பியது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts