திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் உயிரிழப்பு !

நெல்லை மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தாள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பதிவு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் நாளாக திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பை சரி செய்வதற்காக சுடலைமணி இறங்கியபோது விஷவாயு தக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுடலைமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்