ராம நவமி…கருட வாகனத்தில் காட்சி அளித்த தருணம் அது…!

பெருமாள் பெரிய திருவடி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
தஞ்சை மாவட்டம் கிழக்கே அமைந்துள்ள புன்னைநல்லூர் என்ற பகுதியில்,ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்பட்டு வருகின்றனர்.400ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ஸ்ரீ கோதண்டராமரும் ,ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருள்பாலிக்கின்றனர்.
மேலும்,இக்கோவிலில் சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளராமர், சீதை, இலக்குவன் ஆகியோரின் உற்சவர் சிலைகள் அமைந்துள்ளது . பிரசித்தி பெற்ற இந்த கோவிலில்ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி பிரமோற்சவம், சிறப்பாக நடைபெறும்.
இந்த நிலையில்,இந்தாண்டு பிரமோற்சவ விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக, நான்காவது நாளில் பெருமாள் அவரது பெரிய திருவடி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதற்கு முன்னதாக பெருமாளுக்கு பெருந்தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, திருமங்கையாழ்வார் அருளிய தமிழ் பாசுரங்களை ஓதுவார்கள் பாடினர்.
அதனைத் தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. கருட வாகனத்தில் எம்பெருமான் திருவீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.