எலான் மஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் டிரம்ப் !

ஜனநாயக கட்சியினருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளித்து ஆதரவு தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு முழு ஆதரவாக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை.
ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் அதிருப்தி அடைந்தார்.
இதனால் அவர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் டிரம்ப் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு டிரம்பும் பதிலடி கொடுத்தார். இந்த மோதலுக்கு இடையே, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஜனநாயக கட்சியினருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளித்து ஆதரவு தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.