பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த் !

ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய பாம்பன் பலத்திற்கு A.P.J.அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசியா முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டவுள்ளார்.அந்த அறிக்கையில் ,“ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பலமாகும்.
இந்த நிலையில்,ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிவாடைந்துள்ளது.பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திறக்க உள்ளார்.
எனவே, இந்த பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு அடையாளமாக திகழும் முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J.அப்துல்கலாமின் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில், அந்த பாலத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் A.P.J.அப்துல்கலாம் பெயரைச் சூட்ட வேண்டும்.
இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் A.P.J.அப்துல்கலாமின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.