பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிலுள்ளார் .

அந்த அறிக்கையில் ”பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர்.

கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர். அவரது இழப்பு திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் மறைந்தாலும் காலம் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும். தன்னுடைய நடிப்பு ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததோடு தன்னுடைய திறமையையும் நிரூபித்தவர்.

சரோஜா தேவி அவர்களின் மறைவு சினிமா உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts