அச்சத்தோடு இருக்கும் பெண்களை ஆதரிக்க பிறந்தவள் பிரேமலதா விஜயகாந்த் – தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழாரம் !

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்திய அரசியளிலும் அசைக்க முடியாத பெண் சக்தி பிரேமலதா விஜயகாந்த் என தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை கண்ணன் ஐய்யா அவர்கள் இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்க்கடல், பேச்சாளர் , பட்டிமன்ற நடுவர் போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர்.இவர் 2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில் (திருநெல்வேலி) ,நடைபெற்ற மாநாட்டில் பேசி அறிமுகமானார்.

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து பணியாற்றினார்.1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலப் பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் .

இந்நிலையில்,தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் ஐய்யா அவர்கள் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார் ”அந்த நேர்காணலில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நல்ல அறிவுடைவர் . அரசியல் ஆர்வம் கொண்டவர் அதுமட்டுமின்றி அவரை போன்று யாராலும் பரப்புரை செய்ய முடியாது.

நமது முதலமைச்சர்கள் கூட யாரோ ஒருவர் எழுத்திய கடிதத்தை பார்த்து தான் படித்து வருகிறார்.ஆனால், பிரேமலதா அவர்கள் தானாகவே பேசுகிறார்.அதை பார்த்து தான் நான் கூறினேன் ”ஜெயலலிதா செய்வது படிப்புரை மட்டும் தான், பிரேமலதா செய்வது தான் பரப்புரை” என ஒவ்வொரு தொகுதியை பற்றி அவ்வளவு ஆழமாகவும் தெரிந்து வைத்திருக்கிறார்.

மற்றவர்கள் போல் மறைமுகமாக பேசாமல் நேரடியாக களத்தில் இறங்கும் தைரியம் அவர்களிடம் உள்ளது.பிரேமலதாவின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் பார்க்கும் போது எனக்கு பிறகு எனது வாரிசாக நினைத்து மகிழ்ந்தேன்.

பாரதி வழியில் வந்த அச்சமில்லாத ஒரு பெண் பிரேமலதா விஜயகாந்த் . அதுமட்டுமின்றி, அச்சத்தோடு இருக்கும் பெண்களை ஆதரிக்க பிறந்தவள் பிரேமலதா . அவருக்கு மகளிர் நலத்துறை மந்திரியாக பதவி கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts