நெல்லையில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாருக்கு அருவால் வெட்டு !

நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பாப்பாகுடியில் நேற்று இரவு 11 மணியளவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு சென்று, மோதலில் ஈட்பட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது 17 வயது சிறுவன் காவலர்களை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார், தங்களைப் பாதுகாத்து கொள்ள சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து, உடனடியாக சிறுவனை மீட்ட போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சிறுவனின் உயிருக்கு ஆபத்தில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts