பாலியல் வழக்கு |மதபோதகர் ஜான் ஜெபராஜ் நிபந்தனை ஜாமின்வழங்கியது -சென்னை உயர்நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜ் க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்பவர் கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருந்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது,நிகழ்ச்சிக்கு வந்த 17 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு போதகரான ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு அளித்தாக கூறப்படுகிறது.
இதை சிறுமிகளின் பெற்றோர்கள் ,கோவை காட்டூரில் அனைத்து மகளிர்காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜான் ஜெபராஜ் தேடிவந்தனர்.போலீசார் தேடுவதை அறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில்,அவரை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கேரள மாநிலம் மூணாறு அருகே பதுங்கி உள்ளதாக கோவை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் சென்ற போலீசார் ஜான் ஜெபராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜான் ஜெபராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள், ஜான் ஜெபராஜை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.