மதுரை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் !

புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சியாக மதுரையில் உள்ள அப்போலோ கேன்சர் மையம், வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, வாய்ப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை மதுரை அப்போலோ மருத்துவமனை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய அந்த மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. பாலு மகேந்திரா, டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் ஆகியோர், இந்த நோயால் ஆண்டுக்கு 52 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகக் கூறினர்.