நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு !

என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.