ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா!

ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தி உள்ளார்.

செக் குடியரசு நாட்டில் நேற்று ‘ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் பாரிஸ், டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

இப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் பவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பியில் 83.45 மீட்டர் தூரம் வரை ஈட்டியை எறிந்தார்.

பின்னர், மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் தூரத்திலும், நான்காவது வாய்ப்பில் 82.17 மீட்டர் தூரத்திலும், ஐந்தாவது வாய்ப்பில் 81.01 மீட்டர் தூரத்திலும் எறிந்த நீரஜ் சோப்ரா இறுதி வாய்ப்பில் பவுல் செய்தார்.

இதன் மூலம் மற்றவர்களைவிட அதிகபட்சமாக மூன்றாவது வாய்ப்பில் 85.29 மீட்டர் எறிந்த இவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார்.

அதேபோல் 6 வாய்புகளில் 2 வாய்ப்புகளை தவறவிட்ட தென் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தவ் ஸ்மித் அதிகபட்சமாக 84.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இவருக்கடுத்து கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் அனைத்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் 83.63 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தை பிடித்தார்

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts