கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் -பிரதமர் மோடி!

கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது சுரங்கம், ரயில்வே மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் பொது மக்கள் நலனுக்கும் இந்த திட்டம் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்க வேண்டும் என ஆலோசனையின் போது பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.