ஐ.சி.சி.’ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்துள்ள மகேந்திர சிங் தோனியின் பெயர் !

ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.
ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து, ‘ஹால் ஆப் பேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக ஏழு பேரை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி., அவர்களை கவுரவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இணைந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் தோனியோடு, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.