மதுரை சித்திரை திருவிழா….கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலம் !

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது.

முன்னதாக, தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்றார். பின்னர், ராமராயர் மண்டகப்படியில் குழுமியிருந்த திரளான பக்தர் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என முழக்கமிட்டு கள்ளழகரை வழிபட்டனர்.
அதோடு பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். அதன் தொடர்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி சுமார் 4000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்