கும்பகோணம் | நாகேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா !

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், தேருக்கு சிறப்பு பூஜைகளுடன் திரளான பக்தர்கள் நாகேஷ்வரா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் 4 ரத வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது.
மேலும்,திரளான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்ததை பார்த்து வணங்கி பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து நாளை மகாமக குளத்தில் வந்ததை பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தல் கலந்து கொள்வார்கள் என எதிர்பாாக்கப்படுகிறது.