மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி – அதிரடி காட்டும் மாடுபிடி வீரர்கள் !

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், தங்க நாணயம், பித்தாளை அண்டா, சேர், கட்டில் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.