புதுக்கோட்டை | சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம் !

புதுக்கோட்டை அருகே, முத்துமுனீஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்து முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 8:30 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 700 காளைகளும் 200 காளையர்களும் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும் காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியையொட்டி ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர்.