இஸ்ரேல் – ஹமாஸ் போர்| ‘Operation Rising Lion’ என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடக்கம் !

peration Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக இருந்த பல்வேறு அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து,அந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் இன்று வான்வழித் தாக்குதலை நடத்திவருகிறது.

மேலும், ஈரானின் ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தியுள்ளது.இந்நிலையில்,இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது; இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்குகின்றனர்; இப்போது செயல்படவில்லை எனில் நாங்கள் இங்கே இருக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts