சிரியா ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் !

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் போக்கு நீடித்தது.
இந்த நிலையில், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு குண்டு விழுந்து வெடித்தது. இதனால் நேரடி ஒளிபரப்பில் இருந்த ஒரு தொகுப்பாளர் நிகழ்ச்சியை நடுவில் விட்டுவிட்டு ஓடினார்.
சிரியா ராணுவத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதால் சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.