IPL 2025 | புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி வெளியேற்றம் !

மழை காரணமாக, பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறீயது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஒரு வாரம் கழித்து, நேற்று போட்டிகள் மீண்டும் தொடங்க இருந்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது