இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளீர் அணி அபார வெற்றி !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளீர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 13 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மகளிர் அணி வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 319 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 305 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 98 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் கிராந்தி கவுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts