சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உருவாகியுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தை இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார்.
1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.