தைவான் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கம் !

தைவான் தடகளப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தைவான் ஓபன் சர்வதேச தடகள போட்டி தைபே சிட்டியில் 2 நாட்கள் நடந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி நாளில், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி, மூன்று முறை தேசிய சாம்பியனான வித்யா ராம்ராஜ், ரோஹித் யாதவ், பூஜா மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
2-வது நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் 56.53 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா 2 நிமிடம் 02.79 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை டிவிங்கிள் சவுத்ரி 2 நிமிடம் 06.96 வினாடிகளில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
இதில் பூஜா வென்ற 2-வது தங்கம் இதுவாகும். முன்னதாக அவர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தா