இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் உள்ளனர் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம்!

புரட்சியாளர் அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில், விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த கிரேஸ் – இன் – வழக்குரைஞா் மையத்தில் புரட்சியாளர் அம்பேத்கா் 1922-ம் ஆண்டு பாரிஸ்டா் பட்டம் பெற்றார். அதை நினைவுகூறும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவா்கள் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என அம்பேத்கா் விரும்பினார் எனவும் அவரின் கனவுக்கு ஏற்ப, தற்போது இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் உள்ளனா் எனவும் குறிப்பிட்டார்.

இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பழங்குடியினா் பகுதியைச் சோ்ந்த மிகவும் விளம்புநிலை சமூகத்தைச் சோ்ந்தவா் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள நானும் விளிம்புநிலை சமூகத்தைச் சோ்ந்தவன் என்றும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் நிற்கும் இந்த நேரத்தில், சட்டத் துறையில் மட்டுமின்றி இந்திய ஜனநாயக கட்டமைப்பில் அம்பேத்கா் விட்டுச்சென்ற மரபை நினைவுகூருகிறேன்’ என்றும் பேசினார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts