இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு -பி.சி.சி.ஐ அறிவிப்பு !

அடுத்த மாதம் நடைபேற இருந்த இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஓத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடரில் ஆட இருந்தது.
இந்த தொடர் ஆகஸ்ட்டு மாதம் 17ம் தேதி தொடங்க இருந்த நிலையில் வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரை திட்டமிட்ட படி நடத்த முடியாது என பி.சி.சி.ஐ., வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ வங்காளதேச கிரிக்கெட் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தன.
இந்நிலையில் இந்த தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியா-வங்காளதேசம் இடையிலான இந்த வெள்ளைப்பந்து தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த சுற்றுப்பயணத்திற்கான தேடி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது