அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு !

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில், 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெருக்கமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கரோனாவுக்கு எந்த ஒரு மருந்தையும் சுகாதாரத் துறை அங்கீகரிக்கவில்லை என்றும், தவறான தகவலைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது