பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வினாவுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் !

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்,பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில்,கூற்று – ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார் என ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது.

அதற்கு காரணம் – ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார், விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.

இந்த கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் இதற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில்,இன்று பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் நான்காவது கேள்வி எண்ணிற்கான விடை அளித்திருந்தாலே அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts