நீங்க தண்ணீர் குடிக்க மாட்டிங்களா .. அப்போ இது உங்களுக்கு தான் ..!

தண்ணீர் குடிக்காததால் வரும் எட்டு விளைவுகளை இந்த தொகுப்பில் காணலாம்.

- தலைவலி
நாம் அனைவருக்கும் தலைவலி வந்தால் தூங்கினால் சரி ஆகிவிடும் ஈன்ற எண்ணத்தில் தூங்குகின்றோம்.ஆனால், நமது உடலில் தண்ணீர் போதிய அளவு இல்லை என்றால் தான் தலைவலி வரும் உண்மை கரணம். பெரும்பாலான நேரங்களில் தலைவலி நீரிழப்பு காரணமாக ஏற்படுகிறது.

- கவனம் செலுத்துவதில் சிக்கல்
நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் சத்து இல்லாமல் இருந்தால்,கவனம் செலுத்துவதில் சிரமப்படுவோம்.

- சிறுநீர்
நாம் போதுமான அளவு தண்ணீர் அருந்தவிட்டால் சிறுநீரின் நிறத்தை மாற்றிவிடும்.

- உலர் தோல்
நாம் போதுமான அளவு தண்ணீர் அருந்தவிட்டால்,உடலுக்கு தேவையான தண்ணீர் குறைவாக இருந்தால்,உடலில் கிடைக்கக்கூடிய திரவங்கள் முக்கிய உறுப்புகளுக்கு வழங்குவதற்கு முதலில் பயன்படுத்தப்படுகின்றன.இதனால்,தோல் மிகவும் வறண்டு நிலையில் காணப்படும்.

- மலச்சிக்கல்
குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது (முழு தானிய பொருட்கள் போன்றவை), அப்பொழுது நீங்கள் நிறைய திரவங்களை குடிக்க வேண்டும். இது நல்ல குடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

- மயக்கம்
அடிக்கடி தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் குறைந்த இரத்த அழுத்தம். இது , நீரேற்றம் இல்லாததால் ஏற்படலாம்.

- சோர்வு
நீரிழப்பு உடல் வளர்சிதை( metabolism)மாற்றத்தை நிறுத்த வழிவகுக்கிறது, இது நமக்கு தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

- தசைப்பிடிப்பு
எலக்ட்ரோலைட் சமநிலையின்மையால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இங்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது மெக்னீசியம் மற்றும் சோடியம் குளோரைடு. நாம் அதிகமாக வியர்த்து, போதுமான தண்ணீர் (எலக்ட்ரோலைட்டுகள் உட்பட) குடிக்காமல் இருந்தால், நமக்கு தசை பிடிப்புகள் ஏற்படுகின்றன.
தண்ணீரை குடி …தாகத்தை தீர்த்துக்கொள் ..!