இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் – டொனால்ட் டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அணு ஆயுதப் போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 18வது முறையாகப் பேசியுள்ளார்.
கடந்த மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்றும் இரு நாடுகளும் சண்டையிட்டால், வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன் என்றும் அதன்மூலம் அணுசக்திப் போரைத் தடுத்தேன் என்றும் பேசினார்.
கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், மே 10 ம் தேதி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. டிரம்ப் இதனை அறிவித்து, தானே மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார். ஆனால், இந்தியா இந்த கூற்றை பலமுறை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.