அருப்புக்கோட்டையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த கணவரால் பரபரப்பு !

குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா, ஜெயலெட்சுமி என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக்கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளார்.
இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சுந்தரவேலுவின் மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வீட்டில் சடலமாக கிடந்தனர்.
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சுந்தரவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் மாவட்ட எஸ்பி கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.